மனம் அறியும் கலை (Art of Knowing the Mind)
மனம் அறியும் கலை (Art of Knowing the Mind)
Author: த. வெற்றிச்செல்வம்
ISBN: 978-81-997164-3-8
DOI: https://doi.org/10.59646/565
Date of Publication: January 15, 2026
About the Book:
மனித வாழ்க்கை வெளிப்புற உலகை அறிந்து அனுபவிக்கும் ஒரு பயணம் போல தெரிந்தாலும், உண்மையில் அது ஒரு உள்முகப் பயணம். நாம் வாழும் ஒவ்வொரு நாளும் எண்ணங்கள், உணர்வுகள், நினைவுகள், எதிர்பார்ப்புகள், கவலைகள் போன்றவற்றால் நிரம்பியிருக்கிறது. ஆனால், இந்த எல்லாவற்றையும் அனுபவிப்பவர் யார் என்று நாம் ஒருபோதும் நிதானமாகப் பார்த்திருக்கிறோமா? நாமே நம்மைக் குறித்து மிகக் குறைவாகவே அறிந்திருக்கிறோம்.நாம் நினைப்பதைக் “நான்” என்று நினைக்கிறோம்.நாம் உணர்வதை “நான்” என்று நம்புகிறோம்.ஆனால் “நீங்கள் உங்கள் எண்ணங்களும் அல்ல, உணர்வுகளும் அல்ல.நீங்கள் அவற்றைக் கவனிப்பவரே.ஆம் சாட்சி மட்டுமே. ”நாம் பெரும்பாலும் இயந்திர வாழ்க்கை வாழ்கிறோம்.காலை முதல், வேலை, இன்பம்,கவலை, பயம்,மகிழ்ச்சி,துன்பம் இவை அனைத்தும் பழக்கமாய் நடக்கின்றன.அதில் விழிப்புநிலை இல்லாததால்,நாம் வாழ்கிறோமா என்பது கூட தெரியாமல் போகிறது.சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும்.உணர்வுகள் எழுந்து மறையும்.மற்றவர்களின் வார்த்தைகள் நம்மை நிர்ணயிக்கும் பொருட்டாக மாறியிருக்கின்றன. அங்குதான் நம் சுயம் தொலைந்து போயிருக்கிறது. .நாம் கடந்தகால, எண்ணங்கள், துன்பங்கள், எதிர்கால பயங்கள்,அச்சங்கள் இல்லாமல் இந்த “இப்பொழுதை” “இந்நொடியை” கவனித்து வாழத் தொடங்கினால்,வாழ்க்கைச் சுமையாக இல்லாமல்,ஒரு அழகான பயணமாக மாறும். இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது முரண்பட வேண்டாம், ஒப்புக்கொள்ளவும் வேண்டாம்.அதிலுள்ள கருத்துக்களை உங்கள் தினசரி மனப் புரிதலில் பொருத்தி பார்த்து அதோடு பயணித்து அனுபவியுங்கள்.உங்கள் உள்ளத்தில் எழும் மாற்றமே உண்மையான புரிதல்.
