Sale!

காவிரி டெல்டா: சூழலியல் பார்வையில்

Author: இரா. மகேந்திரன்

ISBN: 978-81-987266-6-7

DOI: https://doi.org/10.59646/d/359

Date of Publication: March 2025

About the Book:

‘நீரின்றி அமையாது உலகு’ இது வெறும் சொற்றொடர் அல்ல, இந்தப் பூவுலகின் அச்சாணி, கோடானுகோடி உயிரினங்களின் ஜீவாதாரம். இந்த நூலின் முதல் அத்தியாயம், நீரின் தோற்றம் குறித்த வியத்தகு கருதுகோள்களை அறிவியல் பூர்வமாக எடுத்துரைக்கிறது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிழம்பாய்த் தகித்துக் கொண்டிருந்த பூமியில், நீர் எப்படித் தோன்றியது?. இந்த மாபெரும் பிரபஞ்சப் புதிரை, வியக்க வைக்கும் அறிவியல் கருதுகோள்களின் துணையுடன் இந்நூல் அவிழ்க்கிறது. விண்கற்கள் மூலமாக வந்ததா? அல்லது பூமிக்குள்ளிருந்தே உருவானதா? என்பது போன்ற ஆழமான கேள்விகளுக்கு விடை தேடுகிறது. மேலும், உலகிலுள்ள முக்கிய நதிகளின் பிறப்பிடம், அவை பயணித்த பாதைகள், வரலாற்றுப் பதிவுகள் என அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான பார்வையையும் வழங்குகிறது.

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் பின்னணியிலும், நாம் உண்ணும் உணவின் ஒவ்வொரு பருக்கையிலும், நம் கண்களுக்குப் புலப்படாத, ‘மறைநீர்’ எனப்படும் நீரின் பங்களிப்பு உள்ளது. உதாரணமாக, 1  கிலோ அரிசியை  விளைவிக்க சுமார் 2,500 லிட்டர் நீர் தேவைப்படுகிறது!. நாம் நேரடியாகப் பயன்படுத்தும் நீரை விட ‘மறைமுகமாகப்’ பயன்படுத்தும் நீரின் அளவே அதிகம். எனவே, நீரை நாம் சிக்கனமாக பயன்படுத்த தவறினால், எதிர்காலத்தில் மிகப்பெரிய நீர் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, மழை நீரைச் சேமிப்பது, நீர் மாசுபடுவதைத் தடுப்பது போன்றவை வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் பேருதவியாகும்.

ஆறுகள் கடலுக்கு வழங்கும் அன்பளிப்பாய் உருவான நிலப்பரப்புகளே டெல்டாக்கள்! டெல்டாக்களின் பிறப்பு முதல் அதன் பற்பல கிளைகளாகப் பிரியும் பாங்கு வரை, அவற்றின் பல்வேறு வடிவங்களையும், வகைகளையும் இரண்டாவது  அத்தியாயம் விவரிக்கிறது. அனைத்து நதிகளும் டெல்டாக்களை உருவாக்குவதில்லை.  டெல்டாக்கள் உருவாவது சிக்கலான, அரிதான நிகழ்வு. இவை உருவாக கடலை சென்றடையும் நதியின் நீரோட்டம் மெதுவாக இருக்க வேண்டும், கடலில் அலைகள் மிதமாக எழ வேண்டும். நதி கொண்டு வரும் வண்டல் படிவுகளின் அளவு அதிகமாகவும், டெல்டா உருவாகும் நிலப்பரப்பு அதிக ஆழமில்லாமலும் இருக்க வேண்டும். இந்த காரணிகள் அனைத்தும் சரியாக அமைந்தால் மட்டுமே ‘உண்மையான’ டெல்டா உருவாகும். நைல் டெல்டா இதற்கு சிறந்த உதாரணம். நைல் நதியின் நீரோட்டம் மெதுவாகவும், வண்டல் படிவதற்கு ஏற்ற வகையிலும் இருப்பதால் தான் எகிப்தில் மிகப்பெரிய டெல்டா உருவாகியுள்ளது. ஆனால், அமேசான் நதி அதிவேகமாகப் கடலில் பாய்வதாலும், அட்லாண்டிக் பெருங்கடலின் அலைகள் மிகுந்த ஆற்றலுடன் இருப்பதாலும், அங்கு ‘உண்மையான’ டெல்டா உருவாகவில்லை.

மூன்றாம் அத்தியாயம், நதிகளும், கடலும் சங்கமிக்கும் புள்ளியில் பூக்கும் டெல்டாக்களின் பொருளாதார, சுற்றுச்சூழல், தொல்லியல் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. உலகளவில், தானியங்களில் 4-5% டெல்டாக்களில் தான் விளைவிக்கப்படுகின்றன. உலக மக்கள் தொகையில் சுமார் 5% மக்கள் டெல்டாக்களில் வாழ்ந்தாலும், உலகின் மொத்த நிலப்பரப்பில் இவை வெறும் 0.5% மட்டுமே. லீனா டெல்டா போன்ற டெல்டாக்கள் பசுங்குடில் வாயுக்களை ‘சேமித்து’ உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. டெல்டாக்கள் வெறும் வளமான நிலப்பரப்பு மட்டுமல்ல, உலக வெப்பநிலையை கட்டுப்படுத்தும் அமைப்புகளிலும் ஒன்றாகும்.

நான்காவது அத்தியாயம், டெல்டாக்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி விவரிக்கிறது. உலகிலுள்ள டெல்டாக்களில் 80 %  சுருங்கி வருகின்றன என்பது அதிர்ச்சிக்குரிய உண்மை. பருவநிலை மாற்றத்தின் விளைவுகள், கடல் நீர் மட்டம் உயர்வது, புவி வெப்பமடைவது, உப்புநீர் நிலத்தடி நீரில் கலப்பது, நிலத்தடி நீர் குறைந்து வருவது, காடுகள் அழிக்கப்படுவது, நகரமயமாக்கல், கட்டுமானப் பணிகள் என பல காரணிகளால் டெல்டாக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. டெல்டாக்கள் பாதிப்படைவது தொடர்ந்தால், விவசாயம் பெரும் வீழ்ச்சியடைந்து உணவுப் பஞ்சம் ஏற்படக்கூடும். பல்லுயிர் அமைப்பு பாதிப்படைந்து, கார்பன் சேமிப்பு குறைந்து, பருவநிலை மாற்றத்தின் கோர விளைவுகள் அதிகரிக்கும். அதிதீவிர புயல்கள், பெரும் வெள்ளம், கடும் வறட்சி போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழும். நிலத்தடி நீரை உயர்த்துவது, வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவது, உப்புநீர் நிலத்திற்குள் நுழைவதைத் தடுப்பது போன்ற டெல்டாக்களின் செயல்பாடுகள் முடங்கிப் போகும்.

ஐந்தாவது அத்தியாயம், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் டெல்டாக்களின் இன்றியமையாத பங்கை விவரிக்கிறது. குறிப்பாக, பசியை போக்குவதற்கும், அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரத்தை உறுதி செய்வதற்கும், நிலையான நகரங்களையும், சமூகங்களையும் உருவாக்குவதற்கும், பருவநிலை மாற்றத்தின் கடும் விளைவுகளைத் தணிப்பதற்கும், பூமியில் உயிரினங்கள் தழைத்து வளர்வதற்கும் டெல்டாக்கள் அவசியம். ஆறாவது அத்தியாயம், தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரித் தாயின் நெடும் பயணத்தை நம் கண்முன் நிறுத்துகிறது. கர்நாடகாவின் குடகு மலை, தலக்காவிரியில் பிறக்கும் காவிரி, தமிழ்நாடு வழியாகப் பாய்ந்து பூம்புகார் அருகே வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறாள். காவிரி டெல்டாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழக அரசு இதனை ‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக’ அறிவித்தது. இந்த பாதுகாப்பு, டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் கேடயமாக விளங்குகிறது.

காவிரி டெல்டாவின் முக்கியத்துவத்தையும், அதன் சிறப்புகளையும் ஏழாவது அத்தியாயத்தில் காணலாம். இந்த டெல்டா, தமிழர்களின் நாகரிகத்தையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கும் வரலாற்றுப் பெட்டகம். தமிழர்களின் பண்பாடு, கலை, விவசாயம் என அனைத்திலும் இந்த டெல்டா முக்கியப் பங்காற்றிவருகிறது. உதாரணமாக, சங்க இலக்கியங்களில் காவிரியின் சிறப்பும், டெல்டாப் பகுதியின் வளமும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக இன்றும் கம்பீரமாக நிற்கும் கல்லணை. அதுமட்டுமல்லாமல், தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரத்தில் உள்ள பெரிய கோயில்கள் சோழர்களின் கட்டிடக்கலை, கலைத்திறனை உலகுக்கு எடுத்துரைக்கின்றன. காவிரிப்பூம்பட்டினம் போன்ற பண்டைய நகரங்கள், தமிழர்களின் வணிக மையமாகவும் திகழ்ந்தன. டெல்டாவில் உள்ள மாங்க்ரோவ் காடுகள் கடல் அலைகளைத் தடுத்து நிறுத்தும் ‘பாதுகாப்புச் சுவர்களாகவும்’ செயல்படுகின்றன. 2004-ஆம் ஆண்டு சுனாமி தாக்கத்தின் போது, இந்த மாங்க்ரோவ் காடுகளால் இப்பகுதியில் ஏற்படவிருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பழமையான வரலாற்றுச் சான்றுகளும், புதைபடிவங்களும் இந்த டெல்டாவிற்கு பன்முகத்தன்மையை அளிக்கின்றன. அரியலூர் பகுதியில் கண்டறியப்பட்ட டைனோசர் முட்டைகள், மற்றும் மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவங்கள் இப்பகுதியின் வரலாற்றுப் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்கின்றன.

எட்டாவது அத்தியாயம், காவிரி டெல்டாவின் விவசாயத்தையும், பாரம்பரிய நெல் வகைகளின் சிறப்புகளையும் நம் கண்முன் நிறுத்துகிறது. சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் வேட்டையாடுவதிலிருந்து விவசாயம் ‘செய்யத்’ தொடங்கினர். இந்தப் புதிய வாழ்க்கை முறை ‘நியோலிதிக் புரட்சி’ என அழைக்கப்படுகிறது. காவிரி டெல்டாவின் வளமான மண்ணும், பொங்கி வரும் நீரும், இதமான காலநிலையும் கைகோர்த்து, நெல் சாகுபடிக்கு ஏற்ற செழிப்பான நிலமாக இப்பகுதியை மாற்றின. இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட திரு. எம்.எஸ்.சுவாமிநாதன், அனைவருக்கும் ‘உணவுப் பாதுகாப்பை’ உறுதி செய்தார். திரு. நம்மாழ்வார், திரு. நெல் ஜெயராமன் போன்ற பசுமைப் போராளிகள் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவதையும், பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து அதன் மகத்துவத்தையும் உலகிற்கு எடுத்துரைத்தனர். இந்த அத்தியாயம், அவர்களின் தன்னலமற்ற சேவைகளை எடுத்துரைக்கிறது.

பருவநிலை மாற்றம், பிளாஸ்டிக் மாசுபாடு, கடல் நீர் உட்புகுதல், நிலத்தடி நீர் குறைந்து வருவது என காவிரி டெல்டா எதிர்கொள்ளும் சவால்களை ஒன்பதாவது அத்தியாயம் விவரிக்கிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக டெல்டாப் பகுதிகள்  பெரு வெள்ளம், அதிகன மழையைச் சந்தித்து வருகின்றன. பிளாஸ்டிக் மாசுபாடு டெல்டாக்களில் பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. பத்தாவது அத்தியாயம், டெல்டாவின் பாரம்பரிய விவசாய முறைகளுடன் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, விளைச்சலை அதிகரிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உள்ள வழிமுறைகளை ஆராய்கிறது. அக்ரோவோல்டாயிக்ஸ், ஈரமாக்குதல்-உலர்த்துதல், துல்லிய வேளாண்மை, வெர்டிகல் விவசாயம், ஹைட்ரோபோனிக்ஸ், ஏரோபோனிக்ஸ், ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங், பிளாக் செயின், 3 டி பிரிண்டிங், கிரிஸ்பர் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் படங்கள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் எவ்வாறு டெல்டாவின் விவசாயத்திற்கு பங்களிக்கக்கூடும் என்பதையும் விவரிக்கிறது.

‘டெல்டாவைக் காக்க ஒன்றிணைவோம்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில், பதினொன்றாவது அத்தியாயம் உலகளாவிய முயற்சிகள், நடவடிக்கைகளை எடுத்துரைக்கிறது. உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் டெல்டாக்களின் நிலையான வளர்ச்சிக்கான கள மதிப்பீடுகள், ஆராய்ச்சிகள்,  பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த அத்தியாயம், காவிரி டெல்ட்டாவில் இத்தகைய முயற்சிகளின் வெற்றிக் கதைகள், சவால்கள், எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விவரிக்கிறது. டெல்டாக்களைப் பாதுகாப்பதில் தனிநபர்களின் பங்களிப்பையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. காவிரி டெல்டாவின் எதிர்காலம் நம் செயல்பாடுகளில் தான் உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், வளமான டெல்டாவை உருவாக்கலாம்.

நூல் ஆக்கத்தில் ஊக்கமளித்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி. உயர்திரு A. ராமமூர்த்தி, முனைவர். S. N. ராமசாமி, முனைவர். K . மோகன், முனைவர். I . கிறிஸ்டி ராஜ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. நூலில் பிழைகளைத் திருத்தி உதவி புரிந்த திருமதி. B. சுதாவுக்கு மிக்க நன்றி. அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் துறைத் தலைவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் மிக்க நன்றி. முனைவர். ஆண்ட்ரெஸ் வெர்சைல் (Dr. Andres Verzijl, Sr. Lect. in Water, Urbanization & Climate Justice), முனைவர். ஜோதி நாயர், சூழலியல் ஆராய்ச்சி அசோகா அறக்கட்டளை (ATREE), திரு. R. மணிகண்டன்,  திரு. A. சேதுபதி, திரு. K. செந்தில்குமார சுந்தரம், திரு. C. குலோத்துங்கன், திரு. K. கலைவேந்தன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் புத்தகம் Rethinking Agrarian Futures through Local Action (ReAL), (project number – 112206)  திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ReAL திட்டக்குழு உறுப்பினர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன். இந்த நூல் சிறப்புற வர உதவி செய்த திரு. M. அனிஷ், திரு. B . சத்திய நாராயணன், திரு. V. ஜெயராம், திரு. S. ராஜேஷ்  ஆகியோருக்கும் இதயப்பூர்வமான நன்றி.

உதவிய நூல்கள், ஆய்விதழ்கள், அறிக்கைகள்

  1. Olejarz, J et al. Nat. Commun. 12, 2021, 3985.
  2. Neil J. Smelser, and Paul B. Baltes, International Encyclopedia of the Social & Behavioral Sciences. Pergamon, 2001, 15251.
  3. Wichoski and Lima, Physics Letters A, 262, 1999, 103
  4. Mark Harrison et al. Treatise on Geochemistry (Third edition), Elsevier, 2025, 1.
  5. Water: Its Origin and Use. Nature, 79, 1909,
  6. Bada, Earth and Planetary Science Letters, 226, 2004, 1.
  7. Xi Zeng et al. Life Sciences in Space Research, 45, 2025, 91.
  8. Rowan Det al. Icarus, 395, 2023, 115488.
  9. Vincent and Villanueva, Journal of Quantitative Spectroscopy and Radiative Transfer, 270, 2021, 107708.
  10. who.int
  11. María et al. Green Analytical Chemistry, 13, 2025, 100243.
  12. Yuqiang et al. Earth and Planetary Science Letters. 658, 2025, 119305.
  13. Gillian et al. Water Research, 278, 2025, 123374.
  14. Amit Kumar et al. Environmental Technology & Innovation, 20, 2020, 101164.
  15. Hoogesteger and Verzijl, Geoforum, 62, 2015, 13
  16. Todd Guilfoos, Explorations in Economic History, 95, 2025, 101645.
  17. Dong et al. Science of The Total Environment, 857, 2023, 159714.
  18. Gösta Walin, Palaeogeography, Palaeoclimatology, Palaeoecology, 50, 1985, 323
  19. James and Hakkinen, Deep Sea Research: Topical Studies in Oceanography, 58, 2011, 1741
  20. Huang et al. Alexandria Engineering Journal, 118, 2025, 606
  21. Xing Li et al. Earth-Science Reviews, 175, 2017, 1
  22. Kaicheng et al. Construction and Building Materials, 457, 2024, 139376.
  23. Deepak et al. Journal of Contaminant Hydrology, 271, 2025, 104541
  24. Anthony, Marine Geology, 361, 2015, 53
  25. Liu and Ryu, Quaternary Science Reviews, 357, 2025, 109318
  26. Day et al. Estuarine, Coastal and Shelf Science, 313, 2025, 109065.
  27. Wild et al. npj Mater. Degrad. 6, 2022, 98.
  28. Wang and Liu, Marine Pollution Bulletin, 197, 2023, 115815.
  29. Amir et al. Geochemistry, 83, 2023, 126021.
  30. Chalov et al. Ecological Indicators, 157, 2023, 111252.
  31. Buchwal et al. Agricultural and Forest Meteorology, 339, 2023, 109543.
  32. ch/report/ar6/syr/downloads/report/IPCC_AR6_SYR_SPM.pdf
  33. Hasan et al. WIREs water. 8, 2021, 1559
  34. Oyegun, C.w et al. Landscapes and Landforms of Nigeria. World Geomorphological Landscapes. Springer, Cham. 2023.
  35. nasa.gov
  36. Nava et al. Water Research, 259, 2024, 121849.
  37. van Emmerik et al. Marine Pollution Bulletin, 196, 2023, 115503.
  38. un.org/goals
  39. org
  40. Veettil and Puri, Ocean & Coastal Management, 267, 2025, 107711.
  41. Nagendra and Nallapa Reddy, Journal of Palaeogeography, 6, 2017, 69.
  42. Inauguration of the Mettur Dam and Reservoir. Nature. 134, 1934, 316
  43. Agrawal et al. Journal of Hydrology, 644, 2024, 131896.
  44. Futures, 67, 2015, 22.
  45. கோணங்கி, ‘காவிரியின் பூர்வ காதை’.
  46. சிட்டி, தி.ஜானகிராமன். நடந்தாய்; வாழி, காவிரி!. காலச்சுவடு பதிப்பகம், 1971.
  47. Ramasamy, SM. et al. Sci. 119, 2020, 526.
  48. Ramasamy, SM. et al. Curr. Sci. 112, 2017, 1112.
  49. Chidambaram et al. (2018). Cauvery River. Springer Hydrogeology. Springer, Singapore.
  50. icid-ciid.org
  51. unesco.org/en/list/250
  52. gov.in/ta
  53. Nagendra, and Nallapa Reddy. J Palaeogeography, 6, 2017, 69
  54. Nagendra et al. Marine and Petroleum Geology, 28, 2011, 895.
  55. org/home/en
  56. int/
  57. The Origin and Early Spread of Agriculture in the Old World, Elsevier, 16, 1986, 3-20.
  58. Rashid et al. Hybrid Advances, 10, 2025, 100458.
  59. org.in/agriculture/cauvery-delta-farmers-are-gaining-resilience-by-cultivating-indigenous-rice-varieties
  60. gov.in/web
  61. tnau.ac.in
  62. GOODSPEED, JOURNAL OF DEVELOPMENT ECONOMICS, 121, 2016, 258.
  63. AGRAWAL ET AL. JOURNAL OF HYDROLOGY, 644, 2024, 131896.
  64. ZWARTEVEEN ET AL. CURRENT OPINION IN ENVIRONMENTAL SUSTAINABILITY, 49, 2021, 88.
  65. IN/HOME/
  66. MAHESWARAN ET AL. CHEMOSPHERE, 298, 2022, 134268.
  67. GOV.IN/MEENDUMMANJAPPAI/
  68. CASTAN ET AL. COMMUN. EARTH ENVIRON. 2, 2021, 193.
  69. PRAYAG, A K ET AL. AGRICULTURAL WATER MANAGEMENT. 279, 2023, 108191.
  70. SEO ET AL. GEOPHYSICAL RESEARCH LETTERS, 50, 2023, 103509.
  71. ORG/RESOURCES/REPORT/UNEP-FOOD-WASTE-INDEX-REPORT-2021
  72. LI ET AL, RICE MOL PLANT, 11, 2018, 359.
  73. WESELEK ET AL . AGRON. SUSTAIN. DEV. 39, 2019, 35.
  74. ZAHRAWI AND ALY, SUSTAINABILITY 16, 2024, 8271.
  75. BWIRE ET AL. AGRONOMY. 14, 2024,1421.
  76. MUHAMMAD ET AL. AGRICULTURAL WATER MANAGEMENT. 241, 2020, 106363.
  77. LAKHAN ET AL. ALEXANDRIA ENGINEERING JOURNAL, 118, 2025, 91.
  78. KAUR ET AL. J POLYM ENVIRON 31, 2023, 3701.
  79. KAFLE, JOURNAL OF AGRICULTURE AND FOOD RESEARCH, 11, 2023, 100484.
  80. GANESAN ET AL. INTERNATIONAL JOURNAL OF ENVIRONMENTAL SCIENCE AND DEVELOPMENT. 12, 2021, 145.
  81. RAM ET AL. COMPUTERS AND ELECTRONICS IN AGRICULTURE. 222, 2024, 109037.
  82. ORG/ABOUT/BODIES/SECRETARIAT
  83. ORG/ABOUT-UNCCRD

Description